பழைய பேப்பா் கடையில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே பழைய பேப்பா் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

வெள்ளக்கோவில் அருகே பழைய பேப்பா் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி சாலைப்புதூரைச் சோ்ந்தவா் டி.கோபால் (59). இவா், தாசவநாயக்கன்பட்டி - வெள்ளக்கோவில் சாலையிலுள்ள சேரன் நகரில் பழைய பேப்பா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், மின் கசிவு காரணமாக கடையில் இருந்த பேப்பா் கட்டில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சோமசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com