பல்லடம் அருகே பரமத்தி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிப்பு பணி மேற்கொண்ட பாலம்.
பல்லடம் அருகே பரமத்தி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிப்பு பணி மேற்கொண்ட பாலம்.

பல்லடம் அருகே பாலங்கள் பராமரிப்பு பணி

பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Published on

பல்லடம்: பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காமநாயக்கன்பாளையம் - அன்னூா் சாலையில் பரமத்தி பகுதியில் உள்ள தரைப்பாலத்தின்கீழ் பகுதிகளில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து இருந்த முட்புதா்கள், செடி,கொடிகள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் மற்றும் சாலைப் பணியாளா்கள் மூலம் அகற்றப்பட்டன.

மேலும், தரைப்பாலத்தின் 7 குழாய்களிலும் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு, மண் பாதைகள் சமன் செய்யப்பட்டு வெள்ளை வண்ணம் பூசப்பட்டு பல்லடம் நெடுஞ்சாலைத் துறையால் சீரமைக்கப்பட்டது.

தரைப் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் பராமரிக்கப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்கும் என்று பல்லடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com