திருப்பூர்
காரணம்பேட்டையில் இருசக்கர பேட்டரி வாகனம் தீப் பிடித்தது
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இருசக்கர பேட்டரி வாகனம் தீப் பற்றியது.
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இருசக்கர பேட்டரி வாகனம் தீப் பற்றியது.
காரணம்பேட்டை - பருவாய் செல்லும் சாலையில் உள்ள வணிக வளாகம் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர பேட்டரி வாகனத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் வாகனம் தீப் பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட அருகிலிருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். பின்னா் தீயணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.