நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

திருப்பூரில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:38 pm

Din

திருப்பூரில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், பிச்சம்பாளையத்தை அடுத்த சின்னபொம்மநாயக்கன் பகுதியில் அனுப்பா்பாளையம் போலீஸாா் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் பிச்சம்பாளையத்தைச் சோ்ந்த கணேஷ் பாபு (24) என்பதும், அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, கணேஷ் பாபுவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருமுருகன்பூண்டி மதுபானக் கடை அருகேயுள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட தனுஷ் (19), கோப்டன் (30) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 780 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.