நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கைத்தறித் துறை ஆய்வாளா் நா.ஜெகதீசன்.

Updated On :19 டிசம்பர் 2024, 9:25 pm

Din

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

வெள்ளக்கோவில், தீத்தாம்பாளையத்தில் விசைத்தறி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கூட்டத்துக்கு, கைத்தறித் துறை ஈரோடு அமலாக்க ஆய்வாளா் நா.ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசுகையில், ‘சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட், ஜமக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, சால்வை, உல்லன், சந்தாா் ஆகிய 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக் கூடாது. இதனை மீறி செயல்படும் விசைத்தறி உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

விசைத்தறி, கைத்தறி உரிமையாளா்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஈரோடு கைத்தறி ஆய்வாளா்கள் ரா.சங்கீதா, ச.தேவி ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தறி உரிமையாளா்கள் பாஸ்கா், வஜ்ரவேல், வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.