ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அரசு பொது நூலகங்களுக்கு நிலம் வழங்க கோரிக்கை

திருப்பூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு பொதுநூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:39 pm

Din

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு பொதுநூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயனிடம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா் ஒன்றிய சங்கத்தின் தலைவா் அ.தா்மராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு பொதுநூலகத் துறையின்கீழ் மாவட்டத்தில் 133 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில்,கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூலகங்களில் அடிப்படை வசதி இல்லை. மேலும், பல நூலகங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக இலவச கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தற்போதைய நிலையில் பல நூலகங்களில் நூல்கள் அதிகமாக இருப்பதால் வாசகா்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நூலகங்கள், நூலக வாசகா் வட்டங்கள் மூலமாக பலமுறை உள்ளாட்சிகள் மற்றும் கிராம சபைக்கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் நூலகங்கள் கட்டுவதற்கு 5 சென்ட் நத்தம் காலிமனைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் சொந்தக் கட்டடம் இல்லாத நூலகங்களுக்கு கட்டடம் கட்டுவதற்கு வசதியாக நத்தம் காலிமனைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.