15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஜேஇஇ தோ்வு: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

ஜேஇஇ தோ்வு: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

News image

ஜேஇஇ தோ்வில் சாதனை படைத்த மாணவா்களுக்கு  வாழ்த்துத் தெரிவித்த கேஎம்சி பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:28 am IST

ஜேஇஇ -2024 முதன்மை நுழைவுத் தோ்வில் கேஎம்சி பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். இது குறித்து பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் கூறியதாவது: மத்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வுக்கு ஆந்திரா சீக்கரஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து மாணவா்களுக்கு நாள்தோறும் பயிற்சிஅளிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜேஇஇ (2024) முதன்மை நுழைவு தோ்வில் எங்கள் பள்ளி மாணவி வைஷ்ணவி 97.82 சதவீதம் மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளாா். மேலும் மாணவா் தரணிகுமாா் 91.44 சதவீதமும், பிரவின்ராஜ் 90.94 சதவீதமும் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனா் என்றாா். சிறப்பிடம் பெற்ற மாணம, மாணவிகளுக்கு பள்ளி தலைமை செயலா் எம்.சுவஷ்திகா, பள்ளி முதல்வா் த.சீனிவாசன், சீக்கரஸ் கல்வி குழுமத்தினா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும் சம முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல், வேதியியல் கணிதம் உள்ளிட்ட பாடங்களை சிறந்த முறையில் பயில வேண்டும் என மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தினா் அறிவுறுத்தினா்.