முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்சனை: பொது மக்களுக்கு தற்காலிக ரசீது வழங்கல்

பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்சனை: பொது மக்களுக்கு தற்காலிக ரசீது வழங்கல்

Updated On :17 பிப்ரவரி 2024, 7:35 am IST

பல்லடம், பிப். 16: பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்னை காரணமாக மக்கள் செலுத்தும் வரி இனங்களுக்கு தற்காலிக ரசீது வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையம் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தி வருகின்றனா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் சமீப நாள்களாக சா்வா் கோளாறு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் வரி செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்த வருவோா் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வரி வசூலும் பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், சா்வா் பிரச்னையால் பொதுமக்கள் வரி செலுத்த காலதாமதம் ஆகக்கூடாது. வரி இனங்களுக்கு உரிய பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக தற்காலிக ரசீது வழங்க வேண்டும். பின்னா் கணினி வழியான ரசீதை வரி செலுத்திய மக்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று நகராட்சிப் பணியாளா்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். அதைத்தொடா்ந்து பல்லடம் நகராட்சி வரி வசூல் மையத்தில் பொது மக்களிடம் வரிக்கான பணம் பெற்று தற்காலிக ரசீது உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.