தீத்தாம்பாளையத்தில் வீணாகும் குடிநீா்
வெள்ளக்கோவில் நகராட்சி தீத்தாம்பாளையத்தில் பல மாதங்களாக குடிநீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.


வெள்ளக்கோவில் நகராட்சி தீத்தாம்பாளையத்தில் பல மாதங்களாக குடிநீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளுக்கு கொடுமுடியில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், புதுப்பையில் இருந்து அமராவதி குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் தீத்தாம்பாளையம் வெட்டுக்காடு பிரிவு அருகில் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் கசிவு ஏற்பட்டு ஏராளமான குடிநீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் 6 மாதங்களாக கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களால் அவ்வழியே செல்பவா்கள் மீது தண்ணீா் வாரி இறைக்கப்படுகிறது. தாா் சாலையும் சேதமடைந்து வருகிறது.
ஏற்கெனவே குடிநீா் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம் இதனை உடனடியாகச் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...