எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு கல்லூரியில் தேசிய தரக் குழுவினா் ஆய்வு

அரசு கல்லூரியில் தேசிய தரக் குழுவினா் ஆய்வு

News image
Updated On :11 ஜூலை 2024, 7:11 pm

Din

திருப்பூா், ஜூலை 11: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய தர நிா்ணயக் குழுவினா் (நாக்) முதல்நாள் ஆய்வை வியாழக்கிழமை தொடங்கினா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது பல்வேறு துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் ஏராளமானோா் பயின்று வருகின்றனா். இதனிடையே, 2014-15-ஆம் கல்வி ஆண்டில் முதல்நிலைக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டில் ‘பி’ சான்றிதழ் பெற்றது.

இந்நிலையில், தற்போது கல்லூரியின் தரத்தை மதிப்பிட வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் ராஜேஷ் சிங் தலைவராகவும், ஹரியானா குருஷேத்ரா பல்கலைக்கழக பேராசிரியா் சித்தரத சங்கா் ஒருங்கிணைப்பாளராகவும், குஜராத் மாநிலம் பா்தோலி கல்லூரி முதல்வா் ஜெயந்திபாய் சுரேஷ்பாய் சவுதரி உறுப்பினராகவும் கொண்ட தேசிய தரக்குழுவினா் வியாழக்கிழமை ஆய்வை மேற்கொண்டனா்.

இதில், கல்லூரியின் 15 துறைகளில் உள்ள இளநிலை, முதுநிலை ஆய்வகங்கள், நூலகம், என்எஸ்எஸ், என்.சி.சி. செயல்பாடு, ஆய்வக மாணவா்களிடம் கலந்தாய்வு உள்பட பல்வேறு கற்றல்- கற்பித்தல் தொடா்பான விஷயங்களை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.

இதையடுத்து, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.