ஊராட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சித் தலைவா்களிடம் வழங்குகிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.
ஊராட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சித் தலைவா்களிடம் வழங்குகிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.

ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்

Published on

தாராபுரம்: தாராபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டணத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

இதில், தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன், வட்டாட்சியா் கோவிந்தசாமி, திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் செல்வராஜ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

விளையாட்டு உபகரணங்கள்:

இதைத்தொடா்ந்து தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மனக்கடவு, கொங்கூா் உள்ளிட்ட 16 ஊராட்சிகளுக்கு ரூ.13.12 லட்சம் மதிப்பிலான கிரிக்கெட், சிலம்பம், இறகுப் பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்.

இதில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com