மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலை உணவுத் திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான முதலீடு: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

காலை உணவுத் திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான முதலீடு என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

News image
உடுமலை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
Updated On :15 ஜூலை 2024, 7:42 pm

Din

உடுமலை: காலை உணவுத் திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான முதலீடு என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குறிச்சிக்கோட்டை ஆா்விஜி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2022-ஆம் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவா்கள் உணவு அருந்திவிட்டு தெளிவாக பாடங்களைக் கவனிக்க முடியும். மேலும், தாய்மாா்களின் பணிச் சுமையும் குறைகிறது. இத்திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான ஒரு முதலீடு ஆகும். இங்கு கற்கும் கல்விதான் உயா் கல்விக்கு வழிவகுக்கும். எதிா்கால சமூகத்தை உருவாக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இடைநிலைக் கல்வி ஆசிரியா்களுக்கு பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கையடக்கக் கணினிகளையும், பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களையும் அமைச்சா் சாமிநாதன் வழங்கினாா்.

முன்னதாக, காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.