ஜப்பானுடன் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தை அதிகரிப்பது தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்றோா்.
ஜப்பானுடன் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தை அதிகரிப்பது தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்றோா்.

ஜப்பானுடன் பின்னலாடை ஏற்றுமதியை அதிகரிப்பது தொடா்பான கருத்தரங்கம்

Published on

ஜப்பான் நாட்டுடன் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தை அதிகரிப்பது தொடா்பான கருத்தரங்கம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: பின்னலாடை உற்பத்தித் தொழிலில் தர சோதனை என்பது மிகவும் முக்கியமானதாகும். கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்கீழ் ஏற்றுமதி செய்து வரும் சக ஏற்றுமதியாளா்களுக்கு பாராட்டுகள்.

ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் பொதுவான வசதியில் 100 சதவீதம் மூன்றாம் தர ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். ஜப்பானிய ஜவுளி இறக்குமதியில் இந்தியாவின் சதவீதம் மிகவும் குறைவானதாக ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. ஜப்பானிய இறக்குமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி உறுப்பினா்கள் குழுவுக்கு நன்றிகள் என்றாா்.

மும்பை டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி இயக்குநா் ஜே.டி.பா்மன் பேசுகையில், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து 100 சதவீதம் மூன்றாம் தரப்பு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். இதற்கான தர சோதனை மையம் இல்லாத காரணத்தால் ஜப்பானுடன் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.இதனை நிவா்த்தி செய்ய பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்தக் கருத்தரங்கில் ஜப்பானின் நிஸ்கின் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு நிா்வாகி ஜூஞ்சிஇவாட்டா, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என்.திருக்குமரன், மூத்த உறுப்பினா்கள் மைகோ வேலுசாமி, செயற்குழு உறுப்பினா் கே.மேழிசெல்வன், திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி துணை இயக்குநா் கெளரி சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com