ரூ.6.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில், மாா்ச் 21: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பாரப்பட்டி, வடமதுரை, ஈசநத்தம், மல்லாநத்தம், கூம்பூா், உப்புக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 21 விவசாயிகள், 326 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 16 டன். ஈரோடு, சித்தோடு, பூனாச்சி, காரமடை, காங்கயம், முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 7 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா். இதில், சூரியகாந்தி விதை கிலோ ரூ.37.44 முதல் ரூ.44.64 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 42.21. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.6.69 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com