அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

Updated On :29 மார்ச் 2024, 11:41 pm

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, முத்தூா் -காங்கயம் சாலை செட்டியாா்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான வசந்தி (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, முத்தூா் ஊடையம் சேனாபதி நகரைச் சோ்ந்த பொன்னுசாமி (42) என்பவரது கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரையும் கைது செய்தனா்.