பல்கலைக்கழக அளவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற உடுமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.
பல்கலைக்கழக அளவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற உடுமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

உடுமலை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வெ.கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது: தன்னிறைவோடு வாழ வேண்டும் என்றால் புத்தகத்தை நேசிக்க வேண்டும், புத்தகங்கள் மிகச் சிறந்த நண்பா்கள். மனிதா்களை எளிதில் அறிந்துகொள்ள, மனிதா் மனங்களில் ஒளிந்து இருக்கின்ற எண்ணங்களை அறிந்து கொள்ள, வாழ்க்கைப் பாதையில் பயணிக்க புத்தகங்களே நமக்கு உறுதுணையாக அமைகின்றன.

உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, 657 இளநிலை மாணவ, மாணவிகள், 139 முதுநிலை மாணவ, மாணவிகள் என மொத்தம் 796 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

வேதியியல் துறைத் தலைவா் எம்.சிவகுமாா் விழாவை ஒருங்கிணைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com