3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன் கைது

தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன் கைது

News image

அருண்குமாா்.

Updated On :3 மே 2024, 5:32 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

முத்தூா் ந.கரையூரைச் சோ்ந்தவா் முனியப்பன் (60). இவரது மகன் வழிப் பேரன் அருண்குமாா் (27). இவா் விரும்பிய பெண்ணுக்கு வேறொருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருப்பினும், இருவரும் தொடா்பில் இருந்த நிலையில், அந்தப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு முனியப்பனிடம் அருண்குமாா் கேட்டுள்ளாா்.

வேறொருவருடன் திருமணம் நடைபெற்ற பெண்ணை உனக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என முனியப்பன் மறுத்துள்ளாா்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அருண்குமாா் முனியப்பனின் கைத்தடியைப் பிடுங்கி அவரை தாக்கியுள்ளாா். படுகாயமடைந்த முனியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முனியப்பன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.