3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.20 லட்சம்

வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.20 லட்சம்

News image
Updated On :3 மே 2024, 5:32 pm

Din

வெள்ளக்கோவில் அருகேயுள்ள வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.20 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் குலத்தவா்கள் கோயிலாகும். இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக இரண்டு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பணம், நகை உள்ளிட்டவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உதவி ஆணையா் ரத்னாம்பாள், காங்கயம் சரக அறநிலையத் துறை ஆய்வாளா் கண்ணன், கோயில் செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

இதில், ரூ.9 லட்சத்து 19 ஆயிரத்து 706 ரொக்கம், 150.30 கிராம் தங்கம், 15.27 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் கணக்கா் சிவகுமாா், பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.