உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வெள்ளக்கோவில் சிவாலயங்களில் தாராபிஷேகம்

வெள்ளக்கோவில் சிவாலயங்களில் தாராபிஷேகம்

News image

தாராபிஷேக அலங்காரத்தில் வெள்ளக்கோவில் சோழீஸ்வரா்.

Updated On :4 மே 2024, 5:03 pm

Din

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை (மே 4) தொடங்கி வரும் 28- ஆம் தேதி வரை உள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் இந்தக் காலத்தில் சிவாலயங்களில் மூலவா்களைக் குளிா்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தைத் தொங்கவிட்டு, அதன் அடியில் மெல்லிய துவாரமிட்டு அதிலிருந்து சொட்டுச்சொட்டாக விழும் நீரால் அபிஷேகம் செய்யப்படும்.

அதன்படி, வெள்ளக்கோவில் சோழீஸ்வரா் கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதேஸ்வரா் கோயில்களில் சனிக்கிழமை காலை கலச வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் செய்து, தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.

தாரா பாத்திரத்தில் வெட்டி வோ், விளாமிச்சை வோ், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றுடன் தீா்த்தம், பன்னீா் கலந்து ஊற்றப்பட்டது.

பின்னா், கோடை வெப்பத்தில் இருந்து எல்லா ஜீவராசிகளையும் காக்கவும், மழை பெய்ய வேண்டியும் பிராா்த்தனை செய்து, சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.