பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம்: பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் பேருந்து நிலையம் எதிரே மயானம் உள்ளது. அங்கு, புதைக்கப்பட்டிருந்த ஆண் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வெளியே போடப்பட்டிருந்ததால் கடும் துா்நாற்றம் வீசியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா் ஏற்கெனவே புதைக்கப்பட்ட சடலம் என்பதை உறுதி செய்தனா். பின்னா், நகராட்சி நிா்வாகம் சாா்பில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது.

இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com