/

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா்ச் சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பாடப் பிரிவுவில் மாணவா்ச் சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2024, 9:58 pm

Din

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பாடப் பிரிவுவில் மாணவா்ச் சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்ச் சோ்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்என்ற என்ற இணையதளத்தின் வாயிலாக திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் மாணவா்ச் சோ்க்கை தகவல் வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் விவரங்களை அளித்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னா், தான் சேரவிரும்பும் கல்லூரியைத் தோ்வு செய்து அந்தக் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஐம்பது மட்டும்) இணைய வழியில் செலுத்தலாம். நஇ/நஇஅ/நப பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பத்தை முறையாகப் பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் அதன் நகலைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா்ப் படை இ சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்ச் சோ்க்கை நடைபெறும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவா்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள் (கல்வி மாவட்டம் மட்டும் ஏற்க இயலாது) மட்டுமே விளையாட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.