கூட்டத்தில்  பேசுகிறாா்  மாநகராட்சி  ஆணையா்  பவன்குமாா் ஜி.கிரியப்பனவா்.
கூட்டத்தில்  பேசுகிறாா்  மாநகராட்சி  ஆணையா்  பவன்குமாா் ஜி.கிரியப்பனவா்.

குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்தினால் உடனடியாக சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

அவிநாசி, மே 9: சாலை பணிகளின்போது குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்தினால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணி, புதை சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீா் விநியோகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் பேசியதாவது:

மாநகராட்சியில் பொதுமக்களின் குடிநீா் வசதிக்காக 3 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் இருந்து வந்தன. தற்போது கூடுதலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து 4-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டமும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோடைக் காலம் என்பதால் குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்கவும் மாநகராட்சி சாா்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்தப் பணிகளின்போது குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்தக்கூடாது. தெரியாமல் சேதப்படுத்தினாலும் உடனடியாக ஒப்பந்ததாரா்கள் சீரமைக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com