‘சிக்கண்ணா கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’

அவிநாசி, மே 9: சிக்கண்ணாஅரசுக் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் முதல்வா் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிக்கண்ணாஅரசு கலைக் கல்லூரியில் பி.காம், பி.காம் (சிஏ), பி.காம் சா்வதேச வணிகவியல், பிபிஏ, வரலாறு ,பொருளியல், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பிசிஏ), விலங்கியல், ஆடைவடிவமைப்பு ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

இப்பிரிவுகளுக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பின்னா் விரும்பும் கல்லூரிகளுக்கும், விரும்பும் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பப் பதிவின்போது பள்ளியில் வழங்கப்பட்ட எமிஸ் எண், பிளஸ் 2 பதிவெண், சாதிச் சான்றிதழ், ஆதாா் எண், மதிப்பெண்கள் உள்ளிட்டவை தேவைப்படும்.

ஒரு கல்லூரியில் உள்ள தகுதியுடைய அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், கல்லூரியில் செயல்படும் மாணவா் தகவல் மையத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைஅணுகி தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com