செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :10 மே 2024, 4:53 pm

Din

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (23). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் காங்கயம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

பின்னா் காங்கயம் வந்து விட்டு, மீண்டும் உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோவை சாலையில், காங்கயத்தை அடுத்துள்ள காடையூா் இல்லியம்புதூா் பிரிவு பகுதியில் வந்தபோது நிலைதடுமாறி, இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை நாகராஜ் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.