/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:40 pm

Din

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளா் கே.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அரசு ஊழியா்களின் நிதி சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைவரும் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு பங்கேற்றனா்.