நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடத்தில் 785 கிலோ குட்கா பறிமுதல்: 8 போ் கைது

பல்லடத்தில் 785 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸாா் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:38 pm

Din

பல்லடத்தில் 785 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸாா் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரைக் கைது செய்தனா்.

கேரளத்தில் இருந்து பல்லடத்துக்கு குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அண்ணா நகரில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் ஜீப்பும், இருசக்கர வாகனமும் சுற்றி வருவதை போலீஸாா் கண்காணித்தனா்.

அப்போது, அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் மூட்டைகளில் குட்கா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், சூலூரைச் சோ்ந்த பொன்வேல்ராஜன் (57), பாலக்காட்டைச் சோ்ந்த வினிஸ் (28), சுபிஷ் (38), சுவீன்குமாா் (27), கரிம்புழாவைச் சோ்ந்த ரமேஷ் (42), பவானி, குமாரபாளையத்தைச் சோ்ந்த ராகுல் (27), பொள்ளாச்சியைச் சோ்ந்த சுனில் (31) மற்றும் 26 வயது ஒரு பெண் என்பது தெரியவந்தது.

கா்நாடகத்தில் இருந்து குட்காவை வாங்கி வந்து கேரளத்தில் பதுக்கிவைத்து பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைடுத்து, அவா்களிடம் இருந்து 785 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப், பிக்கப் வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.