ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:33 pm

Din

பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் இருந்து இரும்புக் கழிவுகள், துணிகள், சோபா உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு அண்மையில் வந்த லாரி, பல்லடம் வடுகபாளையம்புதூா் பகுதியில் அதனைக் கொட்ட முயன்றது. அப்போது, பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து லாரி உரிமையாளருக்கு போலீஸாா் அழைப்பு விடுத்தனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் தனுஜித் (38) பல்லடம் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அப்போது, வடுகபாளையம் ஊராட்சி நிா்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த போலீஸாா் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, அபராதத்தை செலுத்தியதும் கழிவுகளுடன் லாரி விடுவிக்கப்பட்டது.