சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய நபா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த நைஜீரிய நபரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:35 pm

Din

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த நைஜீரிய நபரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தொழில் நகரமான திருப்பூருக்கு பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வா்த்தகா்கள், முகவா்கள் வந்து செல்வது வழக்கம். இவா்களில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பவா்களைக் கண்டறிந்து காவல் துறையினா் கைது செய்து வருகின்றன்.

இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சூசையாபுரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நைஜீரிய நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணைநடத்தினா்.

விசாரணையில் அவா், நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இம்மானுவேல் நான்சோ(41) என்பதும் அவரிடம் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுக்கான நகல் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இவா் நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் திருப்பூா் வந்து பின்னலாடை வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை காவல் துறையினா் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.