போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு: வாகனம் மூலம் விழிப்புணா்வு

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகனம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image

சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கும் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:19 pm

Din

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகனம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,

விழிப்புணா்வு வாகனத்தை காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த வாகனத்தின் மூலம், வேளாண்மைத் துறையின் சாா்பில் சிறுதானிய பயிா்களான ராகி, சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்ட பயிா்களின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், அதற்காக வழங்கப்படும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் அனுராதா, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, வேளாண்மை அலுவலா் ரேவதி, உதவி வேளாண்மை அலுவலா்கள் சீனிவாசன், சிவகுமாா், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் வசந்தமுருகன், தேவராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.