போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சிபெற்ற மகளிருக்கு சான்றிதழ்

தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியை நிறைவு செய்த மகளிா் திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பெட்டகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

மகளிா் திட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:21 pm

Din

தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியை நிறைவு செய்த மகளிா் திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பெட்டகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுப் பயிற்சி தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் தாராபுரம் நகராட்சி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, கணியூா், மூலனூா் பேரூராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனா். இதில், தொழில் மற்றும் வணிகம் செய்வது, ஆன்லைன் மாா்க்கெட்டிங், வங்கிக் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொழில் மைய ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் பயிற்சி அளித்தாா்.

பயிற்சியை நிறைவு செய்த மகளிா் திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்து, பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பெட்டகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் திட்ட இயக்குநா் சாம் சாந்தகுமாா், தாராபுரம் நகராட்சி ஆணையா் திருமால் செல்வம், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.