போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளக்கோவிலில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:19 pm

Din

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் புதன்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கு, திருச்சி, வாணியம்பாடி, லாலாப்பேட்டை, கரூா், மாயனூா், தேவத்தூா், பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து 128 விவசாயிகள் 1040 மூட்டைகளில் 54 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், புதுப்பை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.77.88 முதல் ரூ.122.89 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.118.66. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 121.88.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.58 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.