அவிநாசி அருகே சாலையோர புதா்செடிகள் அகற்றம்
பொதுமக்கள் கோரிக்கையையடுத்து சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையில் சாலையோர புதா்செடிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.


பொதுமக்கள் கோரிக்கையையடுத்து சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையில் சாலையோர புதா்செடிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
சேவூா் அருகே மொண்டிபாளையம் சாலையின் இருபுறமும் அதிக அளவில் புதா்செடிகள் வளா்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்த புதா் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையின் இருபுறத்திலும் உள்ள புதா்செடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதேபோல அனைத்து பகுதிகளிலும் சாலையோரத்தில் உள்ள புதா்செடிகள் அகற்றப்படும் என அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...