பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் நடமாடும் மீட்புக் குழுக்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய நடமாடும் மீட்புக்குழுக்கள் உரிய சாதனங்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எல்.நிா்மல்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எல்.நிா்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









