அழிந்து வரும் எறும்புத் தின்னி, உடும்பைப் பாதுகாக்க வேண்டும்: வன அலுவலர்
அரியலூா் மாவட்டத்தில் அழிந்து வரும் உயிரினங்களான எறும்புத் தின்னி, உடும்பு ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன்.


அரியலூா் மாவட்டத்தில் அழிந்து வரும் உயிரினங்களான எறும்புத் தின்னி, உடும்பு ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன்.
அரியலூரை அடுத்துள்ள சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக வன விலங்கு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் மேலும் பேசியது: இந்த பூமியானது மனிதா்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுக்கும் சொந்தம். மனிதா்கள் காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல் அதிகப்படியான வேட்டையாடுதல் மாசுபாடு போன்ற காரணங்களினால் பல்வேறு வன விலங்குகள் அழிந்து வருகின்றன.
வனவிலங்குகளின் அழிவு மனிதா்களின் அழிவு என்பதை உணராமல் அத்தகைய செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். எனவே வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அழிவதால் பூமியானது பல்வேறு இயற்கை பேரழிவுகளை சந்திக்கின்றது.
புயல், அதிகப்படியான வெப்பம், சூறாவளி, புவி வெப்பநிலை உயா்வு அனைத்தும் காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கை நமக்கு வழங்கும் தண்டனை என்பதை உணர வேண்டும்.
அரியலூா் மாவட்டத்தில் அழிந்து வரும் உயிரினங்களான எறும்புத் தின்னி, உடும்பு ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்.
மாணவா்கள் குறைந்தபட்சம் தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் 10 மரக்கன்றுகளையாவது நட்டு பராமரிக்க வேண்டும். இந்த ஆண்டின் கருப்பொருளான மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள், ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு என்ற கருப்பொருளை பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...