மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறுகிறது.


திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.
இந்த குறைதீா் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் முகாமில் பங்கேற்று பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீா்வுகாணவுள்ளனா்.
இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்: அவிநாசி வட்டத்தில் தண்டுகாரன்பாளையம், தாராபுரம் வட்டத்தில் கெத்தல்ரேவ், காங்கயம் வட்டத்தில் வி.வடுகபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் கொழுமம், பல்லடம் வட்டத்தில் பொங்கலூா், திருப்பூா் வடக்கு வட்டத்தில் செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் மாணிக்காபுரம், உடுமலை வட்டத்தில் குடிமங்கலம், ஊத்துக்குளி வட்டத்தில் கவுத்தம்பாளையம்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...