சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.


வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், முத்தூா் சாலை தண்ணீா்ப்பந்தல் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏ.விஜயன் (64). நாட்டராய சுவாமி கோயில் பிரிவருகே சாலையோரத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது,
பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், விஜயன் வாகனத்தின் மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயன் மீட்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய வெள்ளக்கோவிலைச் சோ்ந்த அஸ்வின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...