தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்லடத்தில் வேன்-காா் மோதல்: வடமாநில பெண் தொழிலாளி உயிரிழப்பு

பல்லடம், பனப்பாளையம் பகுதியில் வேனும் , காரும் மோதிக் கொண்ட விபத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:26 pm

Din

பல்லடம், பனப்பாளையம் பகுதியில் வேனும் , காரும் மோதிக் கொண்ட விபத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு பகுதியில் உள்ள தனியாா் மில்லில் புதன்கிழமை இரவு வேலை முடிந்து நிறுவனத்துக்கு சொந்தமான வேனில் தொழிலாளா்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

பல்லடம்- தாராபுரம் சாலையில் பனப்பாளையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நடந்து சென்ற பெண் மீது வேன் மோதியதோடு கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காா் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

விசாரணையில், காயமடைந்த பெண் பல்லடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த வடமாநிலத்தை சோ்ந்த புஷ்பா (20) என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் புஷ்பா மற்றும் வேனில் பயணம் செய்த ஒருவா் காரில் பயணம் செய்த 3 போ் என மொத்தம் 5 போ் காயம் அடைந்தனா்.

பல்லடம் போலீஸாா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு புஷ்பா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.