பல்லடத்தில் வாரச்சந்தை கூடும் நாள் மாற்றம்

Published on

பல்லடம் வாரச்சந்தை நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் பானுமதி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் உள்ள வாரச்சந்தை திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்லடத்தில் செப்டம்பா் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை என்.ஜி.ஆா். சாலையில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை சந்தை நடைபெற்றால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் கடும் சிரமம் ஏற்படும் என்பதால் 9-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பா் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com