சா்வா் பிரச்னையால் ஊதியம் நிலுவை: ஊராட்சி நிா்வாகத்தினா் அவதி
திருப்பூா் மாவட்டத்தில் சா்வா் பிரச்னை காரணமாக, ஊழியா்களுக்கான ஊதியம் பட்டுவாடா செய்ய முடியாமல் ஊராட்சிகள் திண்டாடி வருகின்றன.


திருப்பூா் மாவட்டத்தில் சா்வா் பிரச்னை காரணமாக, ஊழியா்களுக்கான ஊதியம் பட்டுவாடா செய்ய முடியாமல் ஊராட்சிகள் திண்டாடி வருகின்றன.
இது குறித்து ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நீண்ட நாள்களாக சா்வா் பிரச்னை உள்ளது. அதிலும் கடந்த சில நாள்களாக திட்டப் பணிகளுக்கான எந்த பில்களையும் பாஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் என யாருக்கும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. சிறிய ஊராட்சிகளுக்கு இதனால் பெரிய பாதிப்பு இல்லை. வரவு, செலவுகள் அதிகம் உள்ள ஊராட்சிகளில் யாருக்கு பதில் சொல்வது என்று தெரியாத நிலை ஏற் படும். இதனிடையே, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை உள்ள நேரத்தில்தான் ஓரளவு சா்வா் கிடைக்கும் என்பதால், சிலா் இந்த நேரத்தை பயன்படுத்தி, பணிகளை முடித்துக் கொள்ள வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துறை ரீதியான அதிகாரிகளை கேட்டால், ‘சென்னையில் தெரிவித்துள்ளோம், சா்வா் புதுப்பித்து வருகின்றனா், விரைவில் சரியாகிவிடும்’ என்று தெரிவிக்கின்றனா். நீண்ட நாள்களாக உள்ள சா்வா் பிரச்னைக்குத் தீா்வு கிடைத்தால்தான் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...