தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:38 pm

Din

திருப்பூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2- ஆவது மண்டலக் குழு செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் கொங்கு பிரதான சாலை இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் ரங்கநாதபுரம் 2- ஆவது வீதியில் அரசு மதுபானக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் மதுக்கடை அருகில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், மது அருந்த வரும் நபா்கள் சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை மூடக்கோரி மக்கள் குறைதீா் முகாமில் 3 முறை மனு அளித்துள்ளோம். இது தொடா்பாக டாஸ்மாக் மேலாளரிடமும் மனு அளித்தோம். இதையடுத்து 2 மாதங்களுக்குள் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு தற்போது வரையில் கடையை இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆகவே, உடனடியாக இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.