தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொங்கலூரில் பனை விதைகள் பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டாரத்தில் பனை விதைகள் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:20 pm

Din

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டாரத்தில் பனை விதைகள் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பொங்கலூா் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கலூா் வட்டாரத்தில் பனை மேம்பாடு இயக்கம் 2024-25 திட்டத்தின்கீழ் பனை விதைகள் வழங்கப்படவுள்ளது. பொது இடங்களில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற ஊராட்சிக்கு உள்பட்ட நிலங்களுக்கு அதிகபட்சமாக 100 எண்ணிக்கைகளும் , விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 எண்ணிக்கைகளும் பனை விதைகள் வழங்கப்படவுள்ளன.

பனை விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதாா் நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தேவணாம்பாளையத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். மேலும் தகவல்களுக்கு உதவி தோட்டக் கலை அலுவலா்கள் சம்பத் (9159273869), ஜெயராணி (9585720827), கோகுல்ராஜ் (9524847465), தோட்டக்கலை அலுவலா் தமிழி (9095630870) ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.