தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எம்பிராய்டரி கட்டணத்தை உயா்த்தக் கோரிக்கை

எம்பிராய்டரி கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு எம்பிராய்டரி அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:04 pm

Din

எம்பிராய்டரி கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு எம்பிராய்டரி அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் கம்ப்யூட்டா் எம்பிராய்டரி அசோசியேஷனின் 26- ஆவது பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மூலப்பொருள்கள் விலை உயா்வு, தொழிலாளா் பற்றாக்குறை, தொழிலாளா் ஊதிய உயா்வு ஆகியவை காரணமாக திருப்பூா் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் எம்பிராய்டரி கட்டணத்தை உயா்த்தி வழங்கி வேண்டும். பின்னலாடை உற்பத்தித் தொழில் சந்தித்து வரும் தொடா் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். ஜாப்ஒா்க்கில் மட்டும் ஈடுபடும் எம்பிராய்டரி நிறுவனங்களுக்கு மாநில அரசு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் எம்பிராய்டரி அசோசியேஷன் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.