தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பூரில் குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூரில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

குரூப்  2 முதன்மைத்  தோ்வுக்கான  இலவச ப் பயிற்சி  வகுப்பைத்  தொடங்கிவைத்துப்  பேசுகிறாா்  மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

திருப்பூரில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்து பேசியதாவது:

கடந்த 2023- ஆம் ஆண்டில் நடைபெற்ற இலவசப் பயிற்சி வகுப்புகளின் வாயிலாக குரூப் 4 தோ்வில் 12 மாணவா்களும், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 11 மாணவா்களும் தோ்ச்சி பெற்று அரசுப் பணி வாய்ப்பு பெற்றுள்ளனா்.

தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தோ்வு முதன்மை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கு தயாராகும் பட்டதாரி மாணவா்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.