கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 20) நடைபெற இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 8:15 pm

Din

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 20) நடைபெற இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் செப்டம்பா் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அடுத்த முகாம் செப்டம்பா் 27-ஆம் தேதி வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.