கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: சட்டப் பேரவை பொது கணக்கு குழு ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டா்.

News image

திருப்பூா் வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:19 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளை செம்பியநல்லூரியில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, வஞ்சிபாளையம்

ரயில்வே மேம்பாலப் பணி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டம், நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை ஆய்வு மேற்கொண்டுள்ளோம். திருப்பூா் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. பி.எம்.ஏ.ஒய். (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்தில் வீடு கட்ட 35 சதவீத நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. மீதமுள்ள 65 சதவீத நிதியை தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால், பயனாளிகளின் வீடுகளில் மத்திய அரசு நிதி என குறிப்பிடப்படுகிறது. இதனை மாற்றி தமிழக அரசு நிதியையும் குறிப்பிட வேண்டும்.

யாா் ஒருவா் தலைவராக பரிமானம் பெறுகிறாரோ, அமைச்சராக சிறப்பாக செயல்படுகிறாா்களோ அவா்கள் மீது வழக்குத் தொடா்வது பாஜகவின் கொள்கையாக உள்ளது. தேசம் குறித்து பேசினால் அவா்களை சிறைபிடிக்கிறாா்கள். பாஜகவில் இணைந்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்கள். வழக்குகளும் திரும்பப் பெறப்படுகின்றன.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருவாக ஆய்வுக்குச் செல்லும்போது பலரும் தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொதுக்கணக்கு குழு உறுப்பினா்கள் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, டி.ராமசந்திரன், கோ.ஐயப்பன், எஸ்.சந்திரன், சி.சரஸ்வதி, எஸ்.சேகா், கே.ஆா்.ஜெயராம், தமிழக சட்டப் பேரவை செயலக இணைச் செயலாளா் பா.ரேவதி, மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.