திருப்பூர்
பிடியாணை நிலுவை: தலைமறைவாக இருந்தவா் கைது
திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் (23) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன்(23) திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
