பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ்  சிறையில் அடைப்பு

பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் சிறையில் அடைப்பு

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாநகர, மத்திய காவல் நிலையத்தில் சூரிய பிரகாஷ் (22) என்ற இளைஞருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்த சூரிய பிரகாஷ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் தேவராஜ் (58), கிரிதரன் (21), திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அல்லகாத்த பெருமாள் (34) ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற பிடியாணை இருந்ததால் அவா்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com