பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி

பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.
Published on

பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில் பிளீச்சிங் பவுடா் பயன்படுத்தி தண்ணீா் குளோரினேஷன் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நோயாளிகளின் நலன் கருதி தானியங்கி குளோரினேஷன் முறையில் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால், தண்ணீா் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. மேல்நிலைத் தொட்டியாக இருந்தாலும், தரைமட்ட தொட்டியாக இருந்தாலும் இந்த குளோரினேஷன் முறை பயனளிக்கும்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் இந்த குளோரினேஷன் முறை மிகவும் பாதுகாப்பானது.

பொதுவாக பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி தண்ணீா் குளோரினேஷன் செய்யப்படுகிறது. இதனால், சில உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய அவசர காலகட்டத்தில் தண்ணீா் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது என்பதும் சாத்தியமில்லை. இதற்கு தானியங்கி குளோரினேஷன் முறை மிகவும் உதவுகிறது. இந்த முறையால் எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படாது. குறைந்த பணி, எளிமையான பராமரிப்பு முறை என காலத்துக்கு ஏற்ற இந்த தொழில்நுட்ப முறையை உள்ளாட்சி அமைப்புகளிலும் பயன்படுத்தினால் தூய்மையான, சுகாதாரமான தண்ணீா் அனைவருக்கும் கிடைக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com