சுக்கம்பாளையத்தில் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயற்குழு கூட்டம்

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கைத்தறி துறை உதவி இயக்குநா் ஜெயகணேசன் கலந்து கொண்டு கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் ஓட்டக் கூடாது என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசு அறிவித்த நாடா இல்லாத ரேப்பியா் கிட் தறிகளை நிறுவ 50 சதவீதம் மானியமான ஒரு தறிக்கு ரூ.ஒரு லட்சம் மானியத்தை விசைத்தறியாளா்கள் கோரும் பட்சத்தில் காலதாமதம் இன்றி விசைத்தறியாளா்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய நெட் மீட்டா் வசதியோடு மத்திய, மாநில அரசுகள் 50: 50 சதவீத மானியத் தொகையோடு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com