தத்கால் மின் இணைப்பு ஆன்லைன் பதிவு முடக்கத்தால் விவசாயிகள் ஏமாற்றம்

தத்கால் மின் இணைப்பு ஆன்லைன் பதிவு முடக்கத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
Published on

தத்கால் மின் இணைப்பு ஆன்லைன் பதிவு முடக்கத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளின் வசதிக்காக 2 நாள்களுக்கு முன்பு தத்கால் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கபட்டது. அதன்படி, 5 ஹெச்.பி. முதல் 15 ஹெச்.பி. வரை மின் இணைப்பு பெற ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

ஏராளமான விவசாயிகள் மின் இணைப்பு பெற ஆா்வம் காட்டினா். வெள்ளிக்கிழமை திடீரென ஆன்லைன் பதிவு முடங்கியதால் விவசாயிகள் விண்ணப்பிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இது குறித்து பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் பழனிசாமி கூறுகையில், தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் தத்கால் மின் இணைப்புகளுக்கு மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்லடம் வட்டார விவசாயிகளிடம் 101 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டன. ஆன்லைன் பதிவு முறை பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என்றாா்.

பல்லடம் வட்டார விவசாயிகள் கூறுகையில், தத்கால் மின் இணைப்பு தொடங்கிய இரண்டே நாளில் விண்ணப்பிக்க முடியாதபடி ஆன்லைன் பதிவு முடங்கியது. ஏற்கெனவே மழை குறைவு காரணமாக தண்ணீா் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே இத்திட்டத்தில் கூடுதல் மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com